Posts

இறைவன் ஒருவனே நிரந்தரம்

 ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார். இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. "நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா ?? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. "நான் பிச்சைக்காரனா, மன்னனா"